தக்காளி விலை என்ன தெரியுமா?.. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்!
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரத்தைப் பார்ப்போமா.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தமிழகத்தில் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் இரவில் மொத்த விலைக்கும் பகலில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் மாறுப்பட்டு காணப்படுகிறது. காய்களின் வரத்தை பொறுத்தே விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
தக்காளி ரூ. 50 முதல் 68 வரை
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 60-100
பீட்ரூட் 30-40
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 20-40
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 14-18
குடைமிளகாய் 20- 45
கேரட் 40-50
காளிபிளவர் 20 30
சௌசௌ 35-42
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 130- 350
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 15-30
கோவக்காய் 15-25
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 20-40
மரவள்ளி 50-56
நூக்கல் 40-50
பெரிய வெங்காயம் 28-35
சின்ன வெங்காயம் 35-65
உருளை 25-45
முள்ளங்கி 30-35
சேனைக்கிழங்கு 45-50
புடலங்காய் 15-30
சுரைக்காய் 28-30