சுகோய் போர்விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.. !

Su.tha Arivalagan
Apr 08, 2023,11:51 AM IST
டெல்லி:  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சுகோய் 30 போர் விமானத்தில் பறந்து அசத்தினார்.

சுகோய் போர் விமானத்தில் பறந்த 3வது இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய் விமானத்தில் பறந்துள்ளனர். அதேபோல பாதுகாப்பு அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரும் பறந்துள்ளனர்.



இந்த வரிசையில், திரவுபதி முர்மு இன்று போர் விமானத்தில் பயணித்தார். அஸ்ஸாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு. விமானிகள் அணியும் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு சுகோய் விமானத்தில் பயணித்தார் குடியரசுத் தலைவர்.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சுகோய் போர் விமானத்தில் பயணித்தார். அவருக்கு அடுத்த பெண் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்��ு இன்று போர் விமானத்தில் பறந்தார்.

2 சீட் கொண்ட சுகோய் 30 போர் விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதி நவீன போர் விமானமாகும்.  ரஷ்யாவிடம் லைசன்ஸ் பெற்று இந்தியாவில் இது கட்டமைக்கப்படுகிறது. விமானி போர் விமானத்தை ஓட்ட அவருக்கு அருகில் அமர்ந்து பயணித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.