குண்டூர் காரம்..  "செம ஹாட்".. அதிரடியாக ஆடிய பூர்ணா.. ஒரே பாடலில் ஓஹோவென பிரபலம்!

Manjula Devi
Feb 10, 2024,05:17 PM IST
சென்னை: தமிழ் திரைப்படங்களில் என்னதான் நடித்தாலும் கிடைக்காத வரவேற்பு, தெலுங்கில் ஒரே ஒரு பாடலில் கிடைத்துள்ளதால் செம ஹேப்பியாகி விட்டாராம் நடிகை பூர்ணா.

நடிகை பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷமினா காசிம். சினிமாவுக்காக பூர்ணா என்ற பெயரில் நடித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு தமிழில் விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு அவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

தமிழைத் தொடர்ந்து தன் நடிப்பின் திறமையால் தெலுங்கிலும் கால் பதித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் துபாயை சேர்ந்த தொழிலதிபர்  ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் வாழ்வில் நடைபெற்ற வளைகாப்பு, குழந்தை பிறப்பு போன்ற புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.



திருமணத்திற்குப் பிறகு இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில்  திரில்லரான டெவில் திரைப்படம் நடித்தார் பூர்ணா. இப்படம் நடிக்கும் போதுதான் கர்ப்பமானர். ஆனால் இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடையவில்லை. இப்படத்தில் பூர்ணாவின் நடிப்பை, இயக்குநர் மிஷ்கின் பயங்கரமாக புகழ்ந்து பேசியிருந்தார்.. பூர்ணா வயிற்றில் நான் பிறக்க வேண்டும்.. அவர் எனக்கு தாய் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தெலுங்கில் ஹிட்டடித்துள்ளார் பூர்ணா. தெலுங்கில் மகேஷ்பாபு, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள குண்டூர் காரம் படத்தில் ஒரு பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் பூர்ணா. இது பாப்புலராகியுள்ளதாம். இப்பாடலில் பூர்ணாவும், ஸ்ரீலீலாவும் பாஸ்ட் மூவ்மென்ட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். பாடல் பிரபலாகவே, இப்போது பூர்ணாவும் அங்கு மவுசு ஏறிப் போயிருக்கிறார்.



தற்போது பூர்ணா படப்பிடிப்பு தளம், சினிமா நிகழ்ச்சிகளுக்கு தனது கை குழந்தையுடன்தான் வலம் வருகிறாராம். பூர்ணாவின் ஒரே கவலை உடல் எடை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் 
என்பது தானாம். நடிகை பூர்ணா குழந்தை பெற்ற 15 நாட்களில் குண்டூர் காரம் படத்தில் நடித்து டான்ஸ் ஆடி அசத்தினார்  என்பது குறிப்பிடத்தக்கது.