பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ஏற்கனவே தெற்கு ரயில்வே ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதற்கு வசதியாக ஜனவரி 13ம் தேதி போகிப் பண்டிகை, ஜனவரி 14 ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கலுக்காக அரசு விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளது.
ஜனவரி 17ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 25ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேப்பே இல்லாமல் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் கிடைத்துள்ளது. பிறகென்ன மக்களே.. ஜாலியா ஊருக்குப் போய் பொங்கலைக் கொண்டாடிட்டு ஜம்முன்னு திரும்பி வாங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்