அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
கடலூர்: தமிழ்நாட்டில் சமீப காலமாகவே நிறைய என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 120க்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதிலும் திமுக ஆட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து என்கவுண்டர் செய்யப்படும் குற்றவாளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதாவது கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை 16 குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தப்பிக்க முயன்றதாக கூறி போலீசார் என்கவுண்டரில் படுகொலை செய்தனர்.
அந்த வரிசையில் கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் லாரி ஓட்டுனர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட முட்டை விஜய் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர். லாரி ஓட்டுநர்களிடம் ஆறு பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட நிலையில், அவர்களை பிடிக்க முயன்ற போது போலீஸாரை தாக்கி விட்டு தப்பிச் ஓடியுள்ளனர். இதனால் தற்காப்புக்காகவே விஜய் என்பவரை என்கவுண்டரில்
கொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்(19) புதுச்சேரியை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.