பைக் வீலிங் செய்து விபத்து.. படுகாயமடைந்த டிடிஎப் வாசன் கைது.. நடந்தது என்ன?
காஞ்சிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை அதி வேகமாக ஓட்டி அபாயகரமான முறையில் வீலிங் செய்து படுகாயமடைந்த டிடிஎப் வாசன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் படு வேகமாக பைக் ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசன் வீடியோ பதிவு செய்து கொண்டே, வீலிங் சாகசத்தில் ஈடுபட்டதால் பைக் நிலை தடுமாறி பறந்து சென்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதி நவீன ஹெல்மட், பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்ததால் டிடிஎப் வாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
நல்ல வேளையாக அவர் பைக் மோதி விழுந்த இடத்தில் யாரும் இல்லை. யாரேனும் இருந்திருந்தால் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள். அந்த அளவுக்கு வேகமாக வந்து மோதி விழுந்தது அவர் ஓட்டி வந்த பைக். சாலையில் சென்றோர் வாசனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் இவருக்கு உடலில் சிறு சிறு காயங்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.
வாசனின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலரும் வாசனைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அழுத்தம் அதிகரித்ததால் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
யார் இந்த டிடிஎப் வாசன்: