திருப்பூரில் மகாவிஷ்ணு.. பரம்பொருள் பவுண்டேஷனில் வைத்து சென்னை போலீஸ் தீவிர விசாரணை

Manjula Devi
Sep 12, 2024,05:11 PM IST

திருப்பூர்: மூன்று நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரித்து வரும் மகாவிஷ்ணுவை, இன்று திருப்பூர் அழைத்து சென்று பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர்.


சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாகவும் மகாவிஷ்ணு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு என்பவரை போலீசார் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணுவை போலீசார் ஆஜர் படுத்தினர்.அப்போது மூன்று நாள் காவல் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.




இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குழு விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை  தீவிர படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.


இந்த நிலையில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை சென்னை போலீசார்  திருப்பூருக்கு அருகே உள்ள பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முடிவில் மீண்டும் மகாவிஷ்ணுவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளனர்.


மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட திருப்பூரில் செட்டிலானவர் மகாவிஷ்ணு. அங்குதான் அவரது அறம் பொருள் பவுண்டேஷன்  இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்