இதை வைங்க.. சூப்பரா போகும்.. பேர் வைத்து இயக்குனரை வாழ்த்திய கவிப்பேரரசு.. என்ன பெயர் தெரியுமா?
சென்னை: இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் படக்கதையை சொன்னதும் கதை மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வையுங்க. படம் மக்களிடம் சிறப்பாக சென்று சேரும் எனக் வைரமுத்து கூறி உள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து பெயர் வைத்த வேட்டைக்காரி படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து. ஸ்ரீ கருப்பர் ஃபிலிம் சார்பில், இப்படத்தை விஷ்ணுபிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ராஜபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த வனப் பகுதிகள் அழகாக தெரியும். ஆனால் அதற்குள் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்னைகளையும் மையமாக கொண்டு வேட்டைக்காரி படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ராகுல் நாயகனாகவும், சஞ்சனா சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு, மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் வேட்டைக்காரி படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் இசை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் விரைவில் திரைக்கு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்த போனது.அதனால் வேட்டைக்காரி என தலைப்பு வையுங்கள். இப்படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும் என கூறி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை வாழ்த்தி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.