என் தூரிகை மறைந்து ஒரு வருடமாச்சு.. கண்ணீரில் பாடலாசிரியர் கபிலன்
Sep 09, 2023,11:09 AM IST
சென்னை: திரைப்படப் பாடலாசிரியல் கபிலனின் மகள் தூரிகை மறைந்து ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தனது மகள் குறித்த நினைவை டிவீட் செய்துள்ளார் கபிலன்.
திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் மகள்தான் தூரிகை. தந்தையைப் போலவே மிகவும் திறமையானவர். கவிஞராக, ஆடை வடிவமைப்பாளராக, எழுத்தாளராக பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அவர் தனது சென்னை அரும்பாக்கம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை மூலம் அவர் தனது முடிவைத் தேடிக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். தூரிகை மிகவும் தைரியமான, புத்திசாலியான பெண். அவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துத அந்த சம்பவம்.
இந்த நிலையில் தனது மகள் தூரிகை இறந்து ஒரு வருடமாகிறது என்று டிவீட் செய்துள்ளார் கபிலன். மகளை இழந்த நிலையில் கபிலன் மிகவும் மனதொடிந்த நிலையில்தான் வலம் வருகிறார். தனது மகள் நினைவாக அவ்வப்போது ஏதாவது ஒரு கவிதை அல்லது நினைவைப் பதிவிட்டு வருகிறார் கபிலன். தனது மகளின் நினைவாக மகள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். அதை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.