பாம்பன் புதிய ரயில் பாலம்.. ஏப்ரல் 6 தேதி திறந்து வைக்கிறார்.. பிரதமர் நரேந்திர மோடி!
ராமேஸ்வரம்: 546 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் வருகிறார்.
தமிழ்நாட்டில் தென் முனையில் அமைந்துள்ள ராமேஸ்வரம் ராமநாத கோவில் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது காசிக்கு நிகரான தளமாக ராமேஸ்வரமும் உள்ளது. இங்குள்ள 21 புனித தீர்த்தங்களில் நீராடி கடலில் குளித்து ஈசனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள புனித நீரில், நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கும் அதிக அளவு பக்தர்கள் சென்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மண்டபம் கடற்கரையிலிருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கடலை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் பெரிதும் விருப்பம் கொள்கின்றனர். இந்தியாவிலேயே முதல் கடல் பாலம் என்ற பெருமையுடைய ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கப்பல் செல்வதற்கு ஏதுவாக தூக்கி மூடும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பன் பாலம் கடல் அரிப்பின் காரணமாக அவ்வப்போது விரிசல் ஏற்படுவதும், அதனை சரி செய்வதும் வழக்கம். அந்த சமயத்தில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும். ஆனால், தற்போது ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பன் கடல் பகுதிகளில் 546 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 17 கிலோமீட்டர் உயரத்தில், 650 டன் எடை கொண்ட தூக்கு பாலம், தூக்கி மூடும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பாலம் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் ஆறாம் தேதியை தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அங்கு கோயில் வளாகத்தில் மேடை அமைத்து பிரதமர் நரேந்திர மோடி பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் ஆறாம் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் முன்னதாக ஏப்ரல் ஐந்தாம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வர உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.