அபுதாபியில் முதல் பிரமாண்ட இந்துக் கோவில்.. திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.. 2 நாள் பயணம்!
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் முதல் இந்துக் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ளார்.
பிப்ரவரி 13ம் தேதி எமிரேட்ஸ் செல்லும் பிரதமர் மோடி, 14ம் தேதி வரை அங்கு இருப்பார். அப்போது எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயத் அல் நஹியானையும் அவர் சந்திக்கவுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து எமிரேட்ஸுக்கு பிரதமர் மோடி செல்வது இது 7வது முறையாகும்.
எமிரேட்ஸ் அதிபருடன் பேசும்போது இரு தரப்பு உறவுகள், பன்னாட்டு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின்போது துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார். மேலும் துபாயில் நடைபெறும் உலக அரசு மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது இன்னொரு முக்கிய அம்சமாக, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதலாவது இந்துக் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைுப்பார். மேலும் ஜாயேத் விளையாடடு நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியர்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.