டேராடூனில்.. 38 வது தேசிய விளையாட்டுப் போட்டி.. இன்று தொடங்கி வைக்கிறார்.. பிரதமர் நரேந்திர மோடி

Manjula Devi
Jan 28, 2025,10:49 AM IST

டேராடூன்:  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டியை இன்று மாலை 6:00 மணிக்கு  தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் டேராடூன், ஹரித்வார், நைனிட்டால், ஹெல்த்வானி, ருத்ராப்பூர், சிவபுரி, நியூ ஹெக்ரி உள்ளிட்ட ஏழு இடங்களில் வரும் பிப்ரவரி  14ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகின்றன.  




தடகளம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், நீச்சல், ஹாக்கி, பளு தூக்குதல், குத்து சண்டை, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கால்பந்து, மல்யுத்தம், உள்ளிட்ட 35 வகையான போட்டிகளில் மொத்தம் 9500 வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.


குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 391 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 35 வகையான போட்டிகளில் 33 போட்டிகள் மற்றும் கண்காட்சி போட்டியாக இடம் பெற்றுள்ள களரி மற்றும் யோகாசனம் ஆகியவற்றிற்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.


38 வது தேசிய விளையாட்டுப் போட்டியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  இன்று  ஒடிசாவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் உத்கர்ஷ் ஒடிசா - மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025 ஐ  தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தரகாண்டில் உள்ள டேராடூனுக்குச் சென்று மாலை 6 மணியளவில், 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்