உலகின் முதல் நதி வழி சொகுசு கப்பல்.. 51 நாட்கள்.. 27 ஆறுகள்.. 3200 கி.மீ. பயணம்!

Baluchamy
Jan 13, 2023,03:47 PM IST
சென்னை:  உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் ஆறுகளில் பயணிக்கும் 'எம் வி கங்கா விலாஸ்' சொகுசு கப்பலை காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.



பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் முதல் ஆற்றில் பயணிக்கும் சொகுசு கப்பலை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார்.

இந்த கப்பல் வாரணாசியில் ஆரம்பித்து 51 நாட்கள் பயணித்து வங்கதேசத்தை சென்றடையும். மூன்று அடுக்குகள் கொண்டு மிக பிரமாண்டமாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

இந்த சொகுசு கப்பலில் 18 அறைகள் உளதகவும், மொத்தம் 36 சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம் எனவும் கூறபடிக்கிறது. மேலும் இந்த சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சகல வசதிகளும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 'எம் வி கங்கா விலாஸ்' சொகுசு கப்பல் 51 நாட்களில் சுமார் 3200 கிலோமீட்டர் பயணித்து இறுதியக வங்கதேசத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது.

இந்த பயணத்தில் 27 ஆறுகளை கடந்து இந்த சொகுசு கப்பல் செல்கின்றது. மேலும் இந்த பயணத்தில் 50 சுற்றுலா தலங்களையும் கடந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த சொகுசு கப்பலில் 51 நாட்கள் பயணிக்க சுமார் 42 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஆற்றில் பயணிக்கும் உலகின் முதல் சொகுசு கப்பலில்  பயணிக்க சுற்றுலா வாசிகள் பலர் முண்டியடித்துக்கொண்டு தற்போதே புக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.