மறக்க முடியாத சந்திரயான் 3... மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பகிர்ந்த டாப் 10 விஷயங்கள்

Aadmika
Aug 25, 2024,03:09 PM IST

டில்லி : பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தும் மன் கி பாத் நிகழ்ச்சியின் 113 வது நிகழ்ச்சி இன்று நடந்தது. 


இதில் பிரதமர் மோடி மனம் திறந்து பேசிய டாப் 10 விஷயங்கள் இதோ...




1. இந்த ஆண்டு செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றும் போது அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக அளவிலான இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.


2. 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனையோ விஷயங்கள் நடந்துள்ளன. அவை வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடினோம். சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கியதையும் கொண்டாட வேண்டும். கடந்த ஆண்டு இதே நாள் சந்திரயான் வெற்றிகரமாக நிலவின் தென் பகுதியில் சிவ சக்தி முனையில் தரையிறக்கப்பட்டது. நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்தது.


3. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் நாளில் உலக சமஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது. பல விதமான ஆய்வுகள் உலகம் முழுவதும் சமஸ்கிருதத்தில் நடத்தப்பட்டு வருகிறது.


4. படங்களில் தான் மனித-விலங்கு பாசப்பிணைப்பை நாம் கண்டிருப்போம். ஆனால் அசாமில் நிஜத்திலேயே அது நடந்து வருகிறது. அங்குள்ள காட்டு விலங்குகள் மக்களோடு மக்களாக வாழ்வதை பார்க்க முடிகிறது.


5. அருணாச்சலில் விலங்குகளின் அன்பை காட்டுவதுடன், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் புரிய வைத்து வருகின்றனர்.


6. குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முைல் 30 வரை நாடு முழுவதும் போஷான் மாதன் கடைபிடிக்கிறோம்.


7. மறு சுழற்சி முறையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பல பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு பொம்மைகளாக மாற்றப்பட்டுள்ளதால் பல குழந்தைகளில் பொம்மையுடன் விளையாடும் கனவு நிறைவேறி உள்ளது.


8. இந்த மாதம் 29ம் தேதி தெலுங்கு மொழி தினம் கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கு பேசும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மிக அற்புதமான மொழி தெலுங்கு.


9. பாரிசில் பாராஒலிம்பிக் போட்டகள் துவங்கி உள்ளன. நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு 140 கோடி இந்தியர்களும் ஆதரவு அளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.


10. நம்முடைய சுதந்திர போராட்டத்தில் கணக்கில்லாத மக்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களுக்கு அரசியல் பின்புலம் கிடையாது. அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். அந்த தியாகத்தின் பயனாக இன்று வளர்ந்த பாரதம் என்ற லட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் மீண்டும் வர வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்