என்னுடன் சேர்ந்து யோகா செய்யுங்கள்.. பழைய அனிமேஷன் வீடியோக்களை ஷேர் செய்த பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Jun 11, 2024,10:52 AM IST

டெல்லி: சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி அனுசரிக்கப்படவுள்ள நிலையில் யோகாசனம் குறித்த சில அனிமேஷன் வீடியோக்களை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் மோடியையே அனிமேஷனில் வைத்து உருவாக்கப்பட்ட யோகா வீடியோக்கள் இவை.


பிரதமர் மோடிக்கு என்று தனியாக ஒரு யூடியூப் சானல் உள்ளது. நரேந்திர மோடி என்ற பெயரிலான அந்த யூடியூப் சானலில் அவரது பேச்சுக்கள், பிரச்சார உரைகள், நிகழ்வுகள் என அனைத்தும் உள்ளன. இந்த வீடியோக்களில் ஒன்றாக சில வருடங்களுக்கு முன்பு மோடியைப் போல அனிமேஷனில் உருவாக்கப்பட்ட வீடியோக்களும் அடக்கம். அதில் அனிமேஷன் மோடி பல்வேறு விதமான யோகாசனத்தை செய்வது போல உள்ளது.




ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளக்க உரையுடன் கூடிய இந்த அனிமேஷன் வீடியோக்களை தற்போது தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ளார் பிரதமர் மோடி. சர்வதேச யோகா தினம் ஜூன் 21ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்த வீடியோக்களை பகிர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




யோகாசனம் வித் பிஎம் மோடி என்ற தலைப்பிலான அந்த வீடியோக்களில் தியானம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை அனிமேஷன் மோடி செய்துள்ளார். அதாவது 16 வகையான ஆசனங்கள் குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி என மொத்தம் 32 வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வகையான ஆசனத்தையும் மோடிஅனிமேஷன் உருவம் செய்து காட்டுகிறது.  யோகாசனம் மீது விருப்பம் உள்ளவர்களுக்கு இது உதவக் கூடும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


வீடியோ இணைப்பு: https://www.youtube.com/playlist?list=PLBG6UuYpOcTtJuejaJLPYjhEcjdslRWGY