உலுக்கிய நிலநடுக்கம்.. உருக்குலைந்து போன துருக்கி.. உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

Baluchamy
Feb 06, 2023,03:16 PM IST
டெல்லி: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா உதவி செய்ய தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகியது. பொதுமக்கள் பலர் ஈடுபாடுகளில் இருந்து தப்பித்து தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 4.17 மணி அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை புரட்டி போட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதகவும், பூமிக்கு அடியில், சுமார் 11 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்கா புவியில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து சுமார் 15 நிமிடங்கள் இடைவேளையில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

சிரியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள காசியான்டேப் நகரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் உணரப்பட்டதாக கூறுகின்றனர். காசியான்டேப் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார் என்றும் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறுகின்றனர்.

மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் மீட்பு குழுக்கள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டு மீட்பு பணிகள் மிக திவரமாகக் நடைபெற்று வருவதாகவும், இந்த கோர சம்பவத்தில் இருந்து நாங்கள் நிச்சயம் மீண்டு வருவோம் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ட்விட் செய்துள்ளார்.