முடிந்தது  பிளஸ்டூ தேர்வு.. பட்டாசு  வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்!

Su.tha Arivalagan
Apr 03, 2023,01:41 PM IST
சென்னை: பிளஸ்டூ தேர்வுகள் இன்றோடு முடிவடந்தன. இதையடுத்து 12 வருட பள்ளி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்த திருப்தியை பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாடினர்.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் டூ தேர்வுகளும் தொடங்கி நடந்து வந்தன. முதல் நாளிலேயே தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 50,674 பேர் பரீட்சை எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையுடன் தொடங்கிய பிளஸ்டூ தே  ர்வுகள் இன்றோடு முடிவடைந்தன. 



கடைசி நாளான இன்று தேர்வை எழுதி முடித்த மாணவர்கள், பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஏற்கனவே வாங்கி அக்கம்பக்கத்தில் வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து தடபுடலாக கொண்டாடினர். பள்ளிகளுக்கு வெளியே நடந்த இந்த பட்டாசு வெடிப்பால் பரபரப்பும் ஏற்பட்டது.

பிளஸ்டூ தேர்வு  விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. மே 5ம் தேதி வாக்கில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 8.51 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.