Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!
திருநெல்வேலி: தென்காசி டூ செங்கோட்டை இடையே நாளை அதாவது ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் தவிர்த்து அனைத்து நாட்களிலும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்காசி செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்று முதல் 30 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளை மட்டும் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது .
அதாவது மதுரை டூ செங்கோட்டை பயணிகள் ரயில், செங்கோட்டை டூ நெல்லை பயணிகள் ரயில் சேவைகள் என இரு மார்க்கத்திலும் செல்லக்கூடிய தென்காசி மற்றும் செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் (வண்டி எண் 56719) மற்றும் மறு மார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56738) நெல்லை பயணிகள் ரயில்கள், தென்காசி டூ செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56735) நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரயில் மற்றும் மறு மார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 56720) செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் சேவைகள் தென்காசி டூ செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.