என்ன ஒரு கடமை உணர்ச்சி.. அடாத நிலநடுக்கத்திலும் விடாமல் செய்தி வாதித்த நியூஸ் ரீடர்!

Aadmika
Mar 22, 2023,03:05 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அலுவலக கட்டிடம் உள்ளிட்ட அனைத்தும் குலுங்கிய நிலையிலும் விடாமல் தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைத் தொடர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவின் வட பகுதிகள், அதை ஒட்டிய பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் மார்ச் 21 ம் தேதி இரவு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பலரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.




இந்த வீடியோக்களுக்கு இடையே பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நியூஸ் ஸ்டுடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடம் குலுங்கி உள்ளது. அந்த சமயத்திலும் செய்திவாசிப்பாளர் விடாமல் நிலநடுக்கம் பற்றி செய்திவாசித்த 31 விநாடி வீடியோ ஒன்றும் வெளியாகி சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.


மஹ்ஷிரிக் டிவி.,யின் பாஷ்டோ டிவி சேனலில் நிலநடுக்கம் சமயத்திலும் துணிச்சலாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிலநடுக்கம் பற்றிய செய்தியை எந்த வித சலனமும் இல்லாமல் நேரடி ஒளிபரப்பில் வாசித்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்ட ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செய்தி அறை, ஸ்கிரீன் என அனைத்தும் குலுங்கிய போது அவர் மட்டும் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து விட்டு, 


பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 160 க்கும் அதிகமானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்தியாவின் டில்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பல வீடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.