பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கராச்சி: பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராச்சியிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவாப்ஷா என்ற இடத்தில் நடந்த ரம்ஜான் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் சர்தாரி. ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் சர்தாரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
69 வயதான சர்தாரி, மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பது நினைவிருக்கலாம்.