மக்களே ரெடியாக இருந்துக்கோங்க... நாளை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... நாகைக்கு ரெட் அலர்ட்!
Oct 14, 2024,05:14 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னரே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கனமழை குறித்து முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை எண்ணிக்கைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களில் இன்றே மீட்பு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
ரெட் அலர்ட்
திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை
ஆரஞ்ச் அலர்ட்
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
மஞ்சள் அலர்ட்
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தருமபுரி
சேலம்
திருச்சி
புதுக்கோட்டைசெய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்