தொடர் விடுமுறை எதிரொலியாக.. ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

Manjula Devi
Sep 13, 2024,08:29 PM IST

சென்னை:  வார இறுதி நாட்கள், மிலாடி நபி என  தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதல் அதிகபட்சம் 4,500 வரை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.  இதனால் சென்னையிலிருந்து செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


வார இறுதி நாட்கள், மிலாடி நபி என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதாலும் சுபமுகூர்த்த தினம் என்பதாலும் மக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணித்து வருகின்றனர். அதேபோல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே மக்கள் வீடுகளில் இல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் பொழுதுகளை கழித்து வருகின்றனர் . இதனை கருத்தில் கொண்டு இந்த தொடர் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதுகாப்புடன் பயணிக்கவும் அரசு சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. முன்பதிவு சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது. 




ஆனால் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்யாதவர்கள் மற்றும் இறுதி நேரத்தில் கட்டணம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அலை மோதுகின்றன. இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 1,900 முதல் அதிகபட்சம் 4,000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2500 முதல் அதிகபட்சமாக 4500 வரையும், நெல்லை செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 4200 வரையும் டிக்கெட்டி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல குறைந்தபட்சம் ரூபாய் 2000 முதல் அதிகபட்சம் 4,500 வரை டிக்கெட் விலை நிர்ணைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்