கன மழைக்கு நடுவில்.. வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் தங்கம்... இன்றைய விலை என்ன தெரியுமா?

Meenakshi
Oct 15, 2024,11:51 AM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன்  ரூ.56,760க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து நகை விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி குறைந்தே வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.25 குறைந்து ரூ.7,095க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,740க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,760 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,09,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,740 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,920 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,400 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,74,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,755க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த மாத இறுதியில் இருந்து வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும்  இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்