பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாலர்டம் பெரியார் விமர்சனம் குறித்து திமுகவைச் சேர்ந்த சசிகலா என்பவர் கேள்வி எழுப்பிய போது அது குறித்து விவாதிக்க இது கால நேரமில்லை. கண்டிப்பாக விவாதிக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியினர் பதிலளித்தனர்.
சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வடலூர் போலீசார் பொது இடத்தில் அமைதியை சீர் குளைக்கும் விதமாக பேசுவது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது என 2 பிரிவுகளில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். சீமான் மீது பல்வேறு மாவட்டங்களிலும் போலீஸில் புகார் தரப்பட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை தொடர்ந்து அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முக்கிய வேட்பாளரான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, திமுக வேட்பாளர் சந்திரகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும்,திமுகவுக்கு உதயசூரியன் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக இன்று கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரிடம் சீமானின் பெரியார் விமர்சனம் குறித்து திமுக நிர்வாகி சசிகலா என்பவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எங்க அப்பாவிடம் பெரியார் புத்தகம் ஆயிரம் உள்ளது. எங்கள் வீட்டு லைப்ரரியில் தான் இருக்கிறது. கண்டிப்பாக அதற்கான விளக்கத்தை கொடுக்கிறேன். இது அதற்கான கால நேரம் கிடையாது. கண்டிப்பாக வீட்டிற்கு வாங்க உட்கார்ந்து விவாதிக்கலாம். விளக்கம் கொடுக்கிறோம் என திமுக மகளிர் அணி அமைப்பாளரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்