4 விக்கெட்ஸ்.. யார்ரா அந்தப் பையன்?.. மும்பை இந்தியன்ஸை அலற வைத்த 20 வயசுப் புயல்.. நூர் அகமது!

Su.tha Arivalagan
Mar 23, 2025,09:18 PM IST
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியை இன்று நிலை குலைய வைத்து விட்டார் நூர் முகம்மது. ஜஸ்ட் 20 வயதேயான நூர் அகமது 4 விக்கெட்களைச் சாய்த்து மும்பை இந்தியன்ஸ் அணியை ரன் குவிக்க விடாமல் ஆட்டம் காண வைத்து ரசிகர்களை  தெறிக்க விட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் வயது வீரர்களில் ஒருவராக வலம் வரும் நூர் அகமது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.  18 வயதாக இருக்கும்போது ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர். இவர் முதலில் இடம் பெற்றிருந்த அணி குஜராத் டைட்டன்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த ரஷீத் கானுடன் இணைந்து 2 சீசன்கள் விளையாடியவர் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  மாறியுள்ளார்.



சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்களைச் சாய்த்து அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் நூர் அகமது. ரூ. 10 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டவர் நூர் அகமது. அந்த ரேட்டுக்கு தான் சூப்பர் ஒர்த் என்பதை இன்றைய முதல் போட்டியிலேயே நிரூபித்து அசத்தி விட்டார் நூர் அகமது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த ஸ்பினர்கள் வரிசையில் நூர் அகமதுவும் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக டி20 போட்டிகளில் கலக்குகிறார். 14 வயது முதல் முதல் தர கிரிக்கெட் ஆடி வருகிறார் நூர் அகமது. 15 வயது முதல் சர்வதேச அரங்குகளில் அசத்திக் கொண்டிருக்கிறார். 

சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, ராபின் மின்ஸ், நமன் திர் ஆகிய மும்பை இந்தியன்ஸ் விக்கெட்களை இன்று சாய்த்தார் நூர் அகமது.