அமைதிக்கான நோபல் பரிசு : ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி பெறுகிறார்

Aadmika
Oct 06, 2023,03:55 PM IST

நியூயார்க் : 2023 ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசிற்காக இரண்டு பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நர்கீஸ் இந்த பரிசினை வென்றுள்ளார்.


2023 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடிய நர்கீஸ் முகமதிக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது துணிச்சலான போராட்டத்தை பாராட்டி இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல்  தெரிவித்துள்ளது. 




நர்கீஸ் முகமதி தனது போராட்டங்களுக்காக இதுவரை 13 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். இதில் 5 முறை அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 31 ஆண்டுகள் இவர் சிறையில் கழித்துள்ளார். இவர் தற்போது சிறையிலேயே இருந்து வருகிறார். சமூக நீதி, மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றிற்காக நீண்ட கால போராடியவர்களுக்கு இந்த அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது மரபு. அதன் அடிப்படையிலேயே நர்கீஸ் இந்த விருதிற்கு தேர்வாகி உள்ளார். 


இதற்கு முன் 2022 ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினை மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞரான பெலாருசை சேர்ந்த ஆலிஸ் பயாலியாட்சிகிக்கு வழங்கப்பட்டது. உலகின் மிகவும் கெளரவமான விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி துறைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிவியலுக்கான பரிசு அக்டோபர் 09 ம் தேதி இந்திய நேரப்படி பகல் 03.15 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.