தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்னிக்கு என்ன ரேட்னு தெரியுமா மக்களே?

Meenakshi
Apr 10, 2024,05:54 PM IST

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 53,640 க்கு விற்கப்படுகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றாவது குறையுமா குறையுமா என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.  மக்கள்தான் ஏங்குகிறார்களே தவிர, நகை விலை குறைவதாக இல்லை.. அது வீங்கிட்டேதான் போகுது.. 


கடந்த சில நாட்களாக தொடர்ந்து நகை விலை உயர்தே வருகிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் தங்கம் என்பது சாமானிய மக்களுக்கு காட்சிப் பொருளாக மாறும் நிலை உருவாகும் என்று மக்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.




இன்றைய தங்கம் விலை...


இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7315 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58520 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. 


வெள்ளி விலை...


பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்பது போல, தங்கத்துடன் சேர்ந்து  வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலை நேற்றைய  விலையை விட இன்று  ரூ.1 உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 89 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 712 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1000 உயர்ந்து ரூ.89000க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டில், வெள்ளியின் விலை 7.19 சதவீதம் உயர்ந்தும், தங்கத்தின் விலை 13 சதவீதம் உயர்ந்தும் இருந்தது. இந்த விலை ஏற்றம் இந்தாண்டு பிறந்து 4 மாதங்களிலேயே வெள்ளி விலை 11 சதவீதமும்,  தங்கத்தின் விலை15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.