ஜஸ்ட் மிஸ்.. இதை மட்டும் செஞ்சிருக்காட்டி.. ஆட்சியே போயிருக்கும்.. கடைசி நிமிடத்தில் தப்பிய பாஜக!
டில்லி : பாஜக வேட்பாளர்கள் பலரும் இறங்கு முகத்தில் இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக.,வின் இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் அந்த கட்சி அவசரமாக செய்த அரசியல் சாதுர்யமான நடவடிக்கைகள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதைச் செய்யாமல் போயிருந்தால் நிச்சயம் பாஜக தனது ஆட்சியை இழந்திருக்கும்.
அந்த ஒரு சில நடவடிக்கைகளை மட்டும் பாஜக செய்யாமல் தவற விட்டிருந்தால் இந்த அளவிற்கு அதிக சீட்கள் கிடைத்திருக்காது என்பதுடன், ஆட்சியையே இழந்திருக்கும். அதாவது பாஜக.,வை மத்தியில் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியை அமைக்க மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ் குமாரை கடைசி நிமிடத்தில் கஷ்டப்பட்டு, மீண்டும் பாஜக பக்கம் கொண்டு வந்ததுதான் பாஜகவுக்கு தற்போது கை கொடுத்துள்ளது.
நிதிஷ்குமார் வெளியேறிய பிறகு இந்தியா கூட்டணி தடுமாறிப் போனது. கிட்டதட்ட கூட்டணியை உடையும் நிலை கூட ஏற்பட்டது. அதேபோல தெலுங்கு தேசம் கட்சியை வளைத்துப் பிடித்து தனது கூட்டணியில் இணைத்தது, பாஜக. அதோடு பிஆர்எஸ் கட்சியை இந்தியா கூட்டணியில் இணைந்து விடாமல் தடுத்தது போன்ற பாஜக செய்த சில வேலைகளால் தான் பாஜக., இந்த அளவிற்கு ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. இதெல்லாம் செய்ததால் இந்தியா கூட்டணிக்குப் போயிருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியை பாஜக தடுத்து விட்டது.
நிதீஷ் குமாரும், தெலுங்கு தேசமும், இந்தியா கூட்டணியில் இணைந்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய், ஆட்சியை இழந்திருக்கும். இதை உணர்ந்துதான் முன்கூட்டியே நிதீஷை தங்கள் பக்கம் இழுத்து விட்டது பாஜக. அது மட்டுமல்ல இந்தியா கூட்டணியில் இருந்த பல முக்கிய தலைவர்களை கடைசி நிமிடத்தில் தங்கள் பக்கம் இழுந்ததும் பாஜக.,வின் மாஸ்டர் பிளான் என்றே சொல்லப்படுகிறது. இப்படி செல்வாக்கான ஆட்சிகளை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டதால் பாஜக.,வின் வெற்றி எளிதாகி விட்டது.
கிங் மேக்கர்களான நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் கிட்டத்தட்ட கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர். காரணம், இந்த இருவரின் கையில் தற்போது 30 சீட் உள்ளது. இவர்களைப் புறக்கணித்து விட்டு பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயற்சித்தால் ஆட்சியில் நீடிக்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்படும்.
நிதீஷ் குமாரிடம் 16 எம்.பிக்களும், சந்திரபாபு நாயுடுவிடம் 14 எம்.பிக்களும் உள்ளனர். இவர்களின் ஆதரவு தற்போது பாஜகவுக்கு முக்கியமாகியுள்ளது. கடந்த இரு முறையும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்த பாஜக இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியுடன்தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.