புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : விருச்சிகம் ராசிக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கு ?

Aadmika
Dec 30, 2023,03:03 PM IST

பிரதிபலன் கருதாமல் விட்டுக் கொடுத்து போகும் தன்மை கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 2024ம் ஆண்டு, ஏறுமுகமான சூழ்நிலைகளை உருவாக்குகின்றது. சமூகத்தில் உயர்ந்த கெளரவங்களை ஏற்படுத்தி தரப் போகிறது. 2ம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான் இந்த ஆண்டு அதிக நாட்கள் 7ம் வீட்டில் இருப்பதால் திருமணம் ஆக வேண்டி இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணமாகி பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வார்கள். வம்ச அபிவிருத்தி ஏற்படும். 


வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூடி வருகிறது




இந்த வருடம் முழுவதும் விருச்சிக ராசிக்கு 5ம் பாவத்தில் ராகுவும், 11 ல் கேதுவும் இருப்பதால் ஏறுமுகமான நல்ல சூழ்நிலைகள் அமையும். வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு வேலை நிமிடத்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளி மாநிலங்களில் பணிக்காக செல்வது, சொந்த தொழில் செய்வது, வாழ்க்கை துணையுடன் சேருவது என பல எண்ணற்ற நல்ல விஷயங்கள் நடைபெற உள்ளது. ராகு பகவான் 5ம் பாவத்தில் இருப்பதால் குலதெய்வ வழிபாடு செய்து, தெய்வ அனுகிரகத்தை பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால் உங்களின் தோஷங்கள் நிவர்த்தியாகும்.


அர்த்தாஷ்டம சனியால் பிரச்சனை ஏற்படுமோ என நினைக்க வேண்டாம். சனியின் பார்வையால் உங்களுக்கு நன்மைகளே அதிகம் நடைபெற உள்ளன. குரு பகவான் மே 01 ம் தேதிக்கு பிறகு நேர்பாவையாக உங்களின் 7ம் இடத்தை பார்க்கிறார். இதனால் கோடி நன்மைகளை பெறப் போகிறீர்கள். 


தடைகள் நீங்கும்


வயதில் மூத்தவர்கள், குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள்,பணியில் மேலே இருப்பவர்கள் ஆகியோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அதனால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். பணி நிரந்தரம் என்பது இந்த ஆண்டு கிடைக்கும். குறிப்பாக வீடு கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு அதிக நன்மைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல ஆர்வம், ஈடுபாடு ஏற்படும். 


சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதால் உங்களுக்கு அதிகமான நன்மைகள் இந்த ஆண்டில் கிடைக்கும். ஐயப்பனுக்கு மாலை அணிந்து சென்று வர வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக செய்யுங்கள். 48 நாள் விரதம் இருந்து மாதந்தோறும் சபரிமலையில் நடை திறக்கப்படும் நாளில் சென்று, ஐயப்பனை தரிசித்து விட்டு வரலாம். 


விருச்சிக ராசிக்குரிய ஆதிக்க பகவான் செவ்வாய். நிலத்திற்கு அதிபதியாக இருப்பவர் செவ்வாய் பகவான். அதனால் மலை மீது இருக்கும் தெய்வங்களை வழிபடுவது  சிறப்பானதாகும். வீட்டிற்கு அருகில் ஐயப்பன் கோவில் இருந்தால் புதன்கிழமையில் சென்று நெய் விளக்கி ஏற்றி, வழிபடுங்கள். ஐயப்பன் இல்லை என்றால் ஐயனார், சுடலை மாடசாமி, கருப்பண்ண சாமி, சங்கிலிக் கருப்பன் போன்ற தெய்வங்களும் ஒன்று தான்.