புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : சிம்ம ராசிக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கு ?

Aadmika
Dec 30, 2023,10:40 AM IST

வழிய சென்று மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய குணமும், அரவணைப்பு குணமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே....உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


புதன் பகவான் 2,11 க்கு அதிபதியாக இருப்பதால் விளையாட்டு பிரியர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். வேடிக்கை தன்மை அதிகமாக இருக்கும். எப்போதும் ஜாலியான மனநிலையுடன் இருக்கக் கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டில் அருமையான கிரக அமைப்புக்கள் இருப்பதால் நல்ல யோக பலன்களை தரக் கூடியதாக அமைய போகிறது.


பண வரவு இருக்கும்.. செலவும் பின் தொடரும்




2ம் பாவத்திலே கேது பகவான் இந்த ஆண்டு முழுவதும் இருப்பதால் பணம், பொருள் வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். அதீக முறையில் கிடைக்கும் அமைப்பு ஏற்பட உள்ளது. அதே சமயம் ராகு பகவான் செலவையும் தர போகிறார். இருந்தாலும் வரவு நிச்சயமாக அதிகமாக இருப்பதற்கான அமைப்பை கேது பகவான் தருகிறார்.


சனி பகவான் 7ம் பாவத்தில் இருக்கிறார். கண்ட சனி என்பதால் பயப்பட தேவையில்லை. அவருடைய வக்கிர காலத்தில் உங்களுக்கு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஜூன் மாதம் 19ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 04 ம் தேதி வரை நல்ல யோக பலன்களை சனி பகவான் தரப் போகிறார். இந்த காலத்தில் திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணத்தில் இருந்த தடைகளை சனி விலக்க போகிறார். கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி நல்ல லாபத்தை தரக் கூடிய பலனை சனி பகவான் தரப் போகிறார்.


வராகி அம்மனை வழிபடுவது நல்லது


உங்கள் ராசிக்கு 2,11 க்கு அதிபதியான புதன் பகவான் இந்த ஆண்டு மூன்று முறை வக்கிரம் அடைந்து நிவர்த்தி அடைகிறார். மார்ச் 26 லிருந்து ஏப்ரல் 16 வரையும், ஜூலை 20 லிருந்து ஆகஸ்ட் 27 வரையும், நவம்பர் 13 லிருந்து டிசம்பர் 04 வரையும் வக்கிரம் ஆகி நிவர்த்தியாகிறார்.  இந்த சமயங்களில் பண வரவு அதிகரிக்கும். பத்து ரூபாய் சம்பாதிக்கும் இடத்தில் இருபது ரூபாயாக கூடுதலாக வரும். 


2024ம் ஆண்டில் சிவ பெருமானை வழிபடுவதால் உங்களுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்தி தரும். வராகி அம்மனையும் வழிபாடு செய்யுங்கள். வராகி அம்மனை வழிபடுவதால் யோக பலன்களை அள்ளி கொடுக்கும். சிவ பெருமானை எல்லா நாட்களிலும் வழிபடுவது சிறப்பானது என்றாலும், அவருக்குரிய பிரதோஷம், பெளர்ணமி, திங்கட்கிழமைகளில் வழிபட்டால் அதிகப்படியான நன்மைகளை பெற முடியும். சிவனுக்குரிய சிவபுராணம் படிப்பது மிகச்சிறப்பானது.