ஆங்கில புத்தாண்டு 2025 ராசிப்பலன்: மிதுன ராசி வாசகர்களே.. நிதானப் போக்கால் நன்மைகளைப் பெறுவீர்கள்!
உங்களின் புத்தி கூர்மையும், பேச்சாற்றலும் புதிய வாய்ப்புக்களை பெற்றுத்தரும். எதையும் விரைவாக கற்றுக் கொள்ளும் திறமைமிக்க நீங்கள், சூழ்நிலைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் உங்களின் ஆர்வம் முன்னேற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரும்.
நிதான போக்கால் நன்மைகளை பெற வேண்டிய ஆண்டு இது. எந்த விஷயத்திலும் அலட்சியமோ, அவசரமோ கூடாது. வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதே சமயம் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க சற்று தாமதம் ஆகும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோப்புகளை பத்தியமாக கையாள வேண்டும். வேலைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் நிம்மதி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல்நிலை ஆறுதலை தரும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்துவீர்கள். எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். பழைய கடன்கள் அடைபடும். கூட்டு தொழில் மற்றும் புதிய முதலீடுகளில் கவனம் தேவை. அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடரும்.
பேச்சில் நிதானம் வேண்டும். வாக்குறுதிகள் தரும் போது சிந்தித்து செயலாற்ற வேண்டும். அரசியவாதிகள் மேலிடத்தால் கவனிக்கப்படுவார்கள். மற்றவர்களிடம் உங்களின் ரகசியங்கள் எதையும் பகிர வேண்டும். பயணத்தில் வேகம் கூடாது. ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் உணவு பழக்கங்களில் அக்கறை அவசியம். தூக்கமின்மை பிரச்சனை குறையும்.
பெண்கள் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதே சமயம் அலைச்சலும் அதிகம் இருக்கும். வீண் பிடிவாதத்தால் சில வாய்ப்புகளை தவற விட நேரிடும்.
வியாபாரிகளுக்கு இது சாதமாகமான ஆண்டாக இருக்கும். தொழில் உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாகன பயணம் தொடர்பான தொழில்களில் ஆதரவும் ஒத்துழைப்பும் பெருகும். புதிய முயற்சிகளில் அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது சிறப்பு.
பரிகாரம் : தொழில், வியாபாரம், பணவரவில் இருக்கும் தடைகள் விலக ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வருவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்