ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : கும்பம் ராசிக்காரர்களே.. அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்

vanitha
Dec 22, 2024,04:46 PM IST

அமைதியாக இருந்து காரியத்தை சாதித்து கொள்ளும் கும்ப ராசிக்காரர்களே, பிறக்க போகும் 2025 ம் ஆண்டில் எதிலும் பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் சேரும் ஆண்டாக அமையும். அதோடு மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு, பொறுப்புகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் வந்து சேரும். திட்டமிட்டு செயல்பட்டால் எதிலும் உயர்வுகளை பெறலாம். யாருடனும் வீண் வாக்குவாதம் வேண்டாம். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.


வேண்டாத சந்தேகங்களை தவிர்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். மூன்றாம் நபர்களின் தலையீடு குடும்பத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி மனம் விட்டு பேசுவதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அடிவயிறு, தொண்டை, கழுத்து, முதுகு பாதிப்புகள் வரலாம். தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும்.




பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வீட்டை புதுப்பிக்கும் சிந்தனை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள். பெரியவர்களில் ஆலோசனை பெற்று முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. பத்திர விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் வளர்ச்சி தொடரும். அரசுத் துறையினர் பல நன்மைகளை பெறுவார்கள். அரசியல்வாதிகள் அடக்கமாக இருந்தால் பல நன்மைகளை பெற முடியும். 


கலைஞர்களுக்கு திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. படிப்பில் மந்தத்தன்மை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் குறையும். பணிகளில் இருந்து வந்த ஆர்வமின்மை நீங்கும். வாகன பயணங்களின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்கங்களில் எச்சரிக்கை அவசியம். 


பரிகாரம் : யோக நரசிம்மரையும், அம்மன் வழிபாட்டினையும் மேற்கொள்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்