ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : தனுசு ராசிக்காரர்களே.. அவசரம் தவிர்த்தால் ஆனந்தம் அதிகரிக்கும்!
எதிலும் சுதந்திரமாக செயல்பட நினைக்கும் தனுசு ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டில் அமைதியாக செயல்பட்டால் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஆனந்தம் அதிகரிக்கும். எந்த சூழலிலும் அவசரம், பதற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் திட்டமிட்டு, சரியான நேரத்திற்கு வேலையை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களை பற்றி கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். பணத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் தராதீர்கள்.
குடும்பத்தில் அமைதியான போக்கு நிலவும். உறவுகளிடத்தில் அன்பான பேச்சை கையாளுங்கள். கணவன்-மனைவி மனம் விட்டு பேசுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். அதனால் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் கவனமுடன் நடந்து கொள்வதால் தவறுகளால் வீண் பழிகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கலை துறையில் இருப்பவர்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இரவு நேர பயணத்தின் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெண்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது பெற்றோர், பெரியவர்களின் ஆலோசனை பெற்று எடுப்பதால் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் அடிக்கடி மனம் சோர்வடையும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான சூழல் ஏற்படும்.
2025ம் ஆண்டின் முன் பாதியை விட பின் பாதி, அதாவது மே மாதத்திற்கு பிறகு பல நல்ல பலன்கள் ஏற்படும். திருமணம் வாய்ப்புகள் கை கூடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். பண விஷயத்தில் சரியாக திட்டமிடுவதால் நிதி நெருக்கடிகளில் சிக்குவதை தவிர்க்கலாம்.
மனஅழுத்தம், ரத்த அழுத்த மாற்றம், நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். மறைமுக நுட்பங்களை சூழ்நிலை அறிந்து பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்களால் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடும், குரு மகான்களின் வழிபாடுகள் எண்ணங்களில் தெளிவும், எடுத்த காரியங்களில் வெற்றி வாய்ப்புகளும் கை கூடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்