அச்சச்சோ.. உலகை மிரட்ட வருது "X வைரஸ்".. 5 கோடி பேருக்கு ஆபத்து!

Meenakshi
Sep 27, 2023,01:29 PM IST

பெய்ஜிங்:  ஒரு காலத்தில் டிபி, டெங்கு, காலரா போன்றவைதான் பீதியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் வந்துச்சு பாருங்க கொரோனாவைரஸ்.. உலகத்தையே திருப்பிப் போட்டு போய் விட்டது. இப்போது அதையே தூக்கி சாப்பிடும் வகையிலான புதிய வைரஸ் வந்துள்ளதாம்.


இந்த அபாயகரமான வைரஸ் டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.  விஞ்ஞானிகள் இந்த வைரஸ் குறித்து கூறியுள்ள தகவல்களைக் கேட்டால் வயிற்றில் புளியைக் கரைப்பது போல உள்ளது. ஏன்டா இப்பத்தான் கொஞ்சம் எழுந்து வர்றோம்.. அதுக்குள்ள அடுத்ததா என்று பீதியுடன் மக்கள் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.




2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது. சீனாவிலிருந்து தொடங்கி படிப்படியாக உலக நாடுகளை ஆட்கொண்ட இந்த வைரஸ் பாரபட்சமே இல்லாமல் உயிர்களைப் பறித்துக் குவித்தது.


ஐரோப்பிய நாடுகள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தன. இந்தியாவிலும் இது கோர தாண்டவம் ஆடியது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என எல்லா நாடுகளுமே கடும் பாதிப்பை சந்தித்தன. இந்தியாவில் கொரோனாவைஸ் 3 அலைகளாக வந்து பாதிப்பைக் கொடுத்தது. அதில் 2வது அலைதான் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ப்பலியை ஏற்படுத்தியது. 90 சதவீதத்திற்கும் மேலான இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில்தான் தற்போது புதிய வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு எக்ஸ் வைரஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது கொரோனாவைரஸ் பாதிப்பை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5 கோடி பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


இதுவும் கொரோனாவைரஸ் போல பேன்டமிக்கை உருவாக்கும் என்றும் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸை சமாளிக்க தடுப்பூசிகள் தேவைப்படும் என்றும் அதற்கு உலக நாடுகள் ஆயத்தமாக வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  இந்த வைரஸில் எந்த பேத்தோஜன் நோயை உருவாக்குகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால்தான் இந்த வைரஸுக்கு எக்ஸ் என்றே பெயர் வைத்துள்ளனர் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.