மழை வர போகுது.. அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது Low pressure... அலெர்ட்டாக இருங்க!

Meenakshi
Nov 13, 2023,11:08 AM IST

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி காற்று தென்மேற்கு நோக்கி சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது.


வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் பக்கம் வீச உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 14,15,16 அதிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களிலில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




அடுத்த 7 நாட்களுக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  நவம்பர் 14,15 ஆகிய தேதிகளில் ஆந்திரா, ஏனாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும்  நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் மாஹேவிலும்  கனமழை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


தென்மேற்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா, அந்தமான், மேற்கு மத்திய வங்காள விரிகுடா , அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகளிலும் மழை பெய்யும்.  நவம்பர் 15,16 தேதிகளில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் மீது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ. முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.