நீங்க நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா.. முதல்ல இதைப் படிங்க!
Jul 20, 2023,01:23 PM IST
டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் இனிமேல் தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் ஷேர் செய்ய முடியாது என்று நெட்பிளிகிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும்தான் அந்த அக்கவுண்ட்டை ஷேர் செய்து இனி பார்க்க முடியுமாம். ஒரே கணக்கை இனி குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். அது வீட்டிலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, குடும்பத்தினர் மட்டுமே பார்க்க முடியும். அதற்கேற்ப நமது அக்கவுண்டில் எந்த டிவைஸில் நாம் பார்ப்போம் என்பதை சொல்லி விட வேண்டும். அந்த டிவைஸ்தாண்டி வேறு எதிலும் நாம் பார்க்க முடியாது.
இதற்காக Transfer Profile and Manage Access and Devices என்ற ஆப்ஷனை நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்து வருகிறதாம்.