லெப்ட்ல குட் பேட் அக்லி.. ரைட்ல ரெட்ரோ.. நெட்பிளிக்ஸ்காரன் சம்பவம் பண்ணிட்டான் மாப்ளை!

Su.tha Arivalagan
Jan 15, 2025,12:26 PM IST

சென்னை: அஜீத்தின் குட் பேட் அக்லி மற்றும் சூர்யாவின் ரெட்ரோ ஆகிய இரு படங்களையும் நெட்பிளிக்ஸ் வாங்கி விட்டது. இந்த இரு படங்களும் தியேட்டரில் ரிலீஸான பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும்.


அஜீத் தற்போது இரு படங்களில் நடித்துள்ளார். ஒன்று விடா முயற்சி, இன்னொன்று குட் பேட் அக்லி. இரு படங்களும் ரசிகர்களிடையே பயங்கரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


விடாமுயற்சியை, மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்குத்தான் உள்ளது. நீண்ட காலமாக இது தயாரிப்பில் உள்ளது. இந்த பொங்கலுக்கு வந்திருக்க வேண்டியது. வந்திருந்தால் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் திரையீடு தள்ளி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் இந்த மாதக் கடைசியில் படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மறுபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது குட் பேட் அக்லி. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் அதகளம் செய்ய வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடியான இயக்குநர் என்பதாலும் இப்படத்தில் அஜீத்துக்கு 3 விதமான கெட்டப் என்பதாலும் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.


இந்க நிலையில் விடாமுயற்சி படத்தை கடந்த வருடம் ஜனவரி மாதம் நெட்பிளிக்ஸ் கையகப்படுத்தியது. பெரும் தொகைக்கு இந்தப் படம் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இந்த ஜனவரி மாதம் குட் பேட் அக்லி படத்தையும் வாங்கி விட்டது நெட் பிளிக்ஸ். இதுவும் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாம். இரு அஜீத் படங்களையும் நெட்பிளிக்ஸ் வாங்கி விட்ட நிலையில் தியேட்டருக்கு எப்பப்பா இது வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


இதேபோல சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இப்படமும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கங்குவா படத்திற்குப் பிறகு வரப் போகும் சூர்யா படம் என்பதாலும், இது கேங்ஸ்டர் கதை என்பதாலும், கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தையும் தற்போது நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.


இந்தப் படங்கள் அனைத்தும் தியேட்டரில் வெளியான பின்னர் 100 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்