உலக தடகளப் போட்டிகளில் தங்கம்.. இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை

Su.tha Arivalagan
Aug 28, 2023,08:53 AM IST
டெல்லி: புடாபெஸ்ட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 2வது முயற்சியில் தங்கம் வெல்லும் இலக்கைத் தொட்டார் நீரஜ் சோப்ரா. 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த சாதனையை அவர் படைத்தார் 



2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை விட இப்போது அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்தத் தொடரில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

2வது இடத்தை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பெற்றார். செக் நாட்டின் ஜாக்குப் வட்லேஜா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் மேலும் 2 இந்தியர்களான கிஷோர் ஜெனா, டி.பி மனு ஆகியோரும் கூட இருந்தனர். இருப்பினும் அவர்களால் இறுதிச் சுற்றுக்கு வர முடியாமல் போய் விட்டது.  கடைசி 8 இடங்களில் அவர்கள் இடம் பிடித்தனர். அதாவது 5 மற்றும் 6வது இடத்தைப் பெற்றனர்.