Naturopathy: ஏபிசி ட்ரிங் கேள்விப்பட்டிருப்பீங்க.. CCF ட்ரிங்க் பற்றித் தெரியுமா.. இதை முதல்ல படிங்க

Manjula Devi
Dec 05, 2024,06:19 PM IST

மதுரை: மக்களே ஏ பி சி ட்ரிங் கேள்விப்பட்டிருப்பீர்கள், சிசி எப் ட்ரிங்க் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது என்ன சிசிஎப் ட்ரிங்க் என்று தானே கேட்கிறீர்கள் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு இந்த சிசிஎப் ட்ரிக் எதற்கு பயன்படுகிறது என்பதை பார்ப்போம். 


நாம் தினமும் காலையில் எழுந்துக்கிறோம். எழுந்து முடித்ததும் கண்ணாடி முன் நின்று நம் சருமம் ஏன் இப்படி இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என உடலின் வெளியுறுப்புகளை மட்டுமே கவனித்து வருகிறோம். என்றாவது உள்ளுறுப்புகள் எப்படி இயங்குகிறது. அதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை யோசித்து இருக்கிறீர்களா. யோசிக்க வேண்டும். ஏனென்றால் தினமும் நம் வாய் மூலம் வயிற்றுக்குள் போடும் அனைத்து உணவுகளையும் நம் உள்ளுறுப்புகள் சீராக இயங்கி செரிமானம் செய்து அதன் சத்துக்களை உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் பிரித்து அனுப்பி, எஞ்சியுள்ள கழிவுகளை மலக்குடலுக்கு அனுப்புகிறது.




இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் அனைத்து உள்ளுறுப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு ரெஸ்ட் என்பது வேண்டாமா. அதை நாம் சிந்திக்க வேண்டும்.  சரி அதற்கு எப்படி ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்.. வாங்க சொல்கிறேன்.. அந்த காலத்தில் காலையில் 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வயலுக்கு சென்று தங்கள் உடல் உழைப்பை செலுத்தி வேலை பார்த்துவிட்டு நன்றாக பசி வந்த பின்பு 10 ,11 மணிக்கு  காலை உணவை சாப்பிட்டு முடித்து விடுவார்கள். அதேபோல் மீண்டும் தங்களது பணிகளைத் தொடர்ந்து உழைத்து முடித்த பிறகு மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து இரவு 7 முதல் 8 மணிக்குள் படுக்க சென்று விடுவர். 


இதன் பிறகு மனித உடலில் செரிமான இயக்கம் என்பது எட்டு டூ ஒன்பது மணி ஆகும். இதனால் மனித உடலின் செரிமான இயக்கம் சீராக இருந்தது. அதே சமயத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர். அதாவது பகலில் நன்றாக உழைத்து பசித்த பின்பு உணவு உண்டு, இரவு உணவை தவிர்க்க வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள். 


ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் இதை பின்பற்றுகிறார்களா என்றால் கிடையாது. காலையில்  எழுந்திருக்கவே தாமதமாகிறது. இதனை தொடர்ந்து காலை உணவு மதிய உணவு பிறகு இரவு  9 மணி 10 மணி என அதி கனமான உணவுகளை உட்கொள்கின்றனர். இதனால் செரிமானம் எவ்வாறு நடைபெறும். செரிமான நேரத்தில் நாம் சாப்பிடும் போது மூளை செரிமான மண்டலத்திற்கு கட்டளை இடுமாம். அதாவது வாயில் உணவு வருகிறது  உன் வேலையை நிறுத்தி வை என்று. இப்படி தினம் தினம் நம் உறுப்புகள் அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்து அதன் பணிகளை நிறுத்தி வைத்திருந்தால் என்ன ஆகும் சற்று சிந்தித்துப் பாருங்கள் மக்களே.


இது மட்டுமல்லாமல் இயற்கை வாழ்வியல் மூலம் யோகா நமக்கு கற்றுத் தரும் பாடம் என்னவென்றால் இரவு உணவை மாலை 6 மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்பதுதான். இதனால் செரிமான பிரச்சனை சீராகிறது. அதாவது மாலை 6 மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்து விட்டால், சிறுகுடல் பெருகுடல் உணவுக் குழாய்  என அனைத்தும் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இரவில் சாப்பிடும் உணவுகள் காலையில் எளிதில் கழிவுகளாக வெளியேறும். இந்த கழிவுகள் வெளியேறாமல் இருப்பதால் நமக்கு பல்வேறு தொற்றுகளும், நோய்களும் வந்து விடுகின்றன. நமது உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மருத்துவரிடம் சென்றால் முதலில் நம் மலம் எப்படி போகிறது என்று தான் டாக்டர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஏனென்றால் நம் மலம் எப்படி இருக்கிறது என்பதை வைத்துதான் நோயின் தீவிரத்தையும் காரணத்தையும் மருத்துவர்கள் அறிவார்கள்.இதனால் செரிமான மண்டல இயக்கம் என்பது மிக மிக முக்கியமானது.


மேற்கொண்ட முறைகளை பின்பற்றி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செரிமான பிரச்சனையை சரி செய்ய முடியும்.. அதாவது  சிசிஎப் டிரிங்க் மூலமாக சரி செய்ய முடியும். அது என்ன சிசிஎப் ட்ரிக் வாங்க பாப்போம். 


சீரகம் 

கொத்தமல்லி விதை 

சோம்பு


இந்த பொருட்கள் மூன்றையும் சம பங்கில் எடுத்துக் கொண்டு நன்றாக வெயிலில் உலர்த்தி பவுடராக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தினமும் இரவு படுப்பதற்கு முன்பு, அரைத்த கலவைகளை ஒரு டீஸ்பூன் எடுத்து, 100 எம்எல் தண்ணீரில் நன்றாக கொதிக்க விட்டு 500 எம்எல் ஆக வற்றிய பிறகு, அதனை பருகி வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும் என இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


என்னங்க இது ரொம்பக் கஷ்டமே இல்லைங்க தயாரிக்க.. இன்னிக்கு செஞ்சு வச்சு குடிச்சுப் பாருங்க.. குடும்பத்தோடு ஆரோக்கியமாக இருங்க.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்