விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்.. விரைவில் பூமிக்குத் திரும்புவார்.. நாசா கொடுத்த அப்டேட்
வாஷிங்டன்: பூமிக்கு திரும்ப முடியாமல் கடந்த எட்டு மாதங்களாக சர்வதேச விண்வெளியில் மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஆய்வுக்காக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திருப்ப முடியாமல் 8 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.
இவர்களை பூமிக்கு மீட்டு வருவதற்கு நாசா எலான் மாஸ்க் உதவியை நாடியது. இதனை தொடர்ந்து இருவவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் நீடித்தது.
இதற்கிடையே சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 25 ஆம் தேதி பூமிக்கு திரும்ப இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அதற்கு முன்னதாகவே பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை spacex நிறுவனத்தின் crew dragon capsule மூலம் வரும் மார்ச் 12 ஆம் தேதி பூமிக்கு அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பேக்எக்ஸ் நிறுவனம், எலான் மஸ்க்கின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.