3வது முறையாக.. இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி.. கோலாகல ஏற்பாடு

Manjula Devi
Jun 08, 2024,09:59 PM IST

டெல்லி:  டெல்லி ராஷ்டிரபதி பவனில், இரவு 7:15 மணிக்கு பிரதமர் நரேந்திர மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அண்டை நாட்டுத்  தலைவர்கள் உட்பட 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.


லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாளை மோடி தலைமையில் பதவியேற்கவுள்ளது. நேற்று மோடி, நாடாளுமன்ற குழுத் .தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சிமயைக்க உரிமை கோரினார். அவரும் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.




இதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்கவுள்ளனர். பதவியேற்பு விழா நாளை இரவு 7:15 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது . இதற்காக  அண்டை நாட்டு தலைவர்கள் உட்பட 8000 பேர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இலங்கை பிரதமர், நேபாள நாட்டு பிரதமர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல மாலத்தீவு அதிபரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமருடன் பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியல் இன்று இரவுக்குள் முடிவாகி விடும் என்று தெரிகிறது. இதுதொடர்பான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.


புதிய அரசு பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்தில் புதிய எம்.பிக்கள் பதவி ஏற்பார்கள். தற்காலிக சபாநாயகர் பதவியேற்பை நடத்தி வைப்பார். அதன் பின்னர் லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதன் பின்னர் கூடும் முதல் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார்.