ஸ்டாப்பிங்கில் பஸ் நிற்காமப் போயிருச்சா.. நீங்க உடனே செய்ய வேண்டியது  இதான் பாஸ்!

Su.tha Arivalagan
Nov 26, 2023,01:56 PM IST

சென்னை: ஸ்டாப்பிங்கில் பஸ் நிற்காமப் போயிருச்சு.. பலரும் சொல்லும் ஒரு பொதுவான புகார் இது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் இன்று வரை தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற குறைபாடுகளுக்கு உடனுக்குடன் நிவர்த்தி காண சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.


ஸ்டாப்பிங்கில் பஸ் ஒழுங்காக நிற்பதே கிடையாது.. கூட்டமாக இருந்தால் ஒன்று ஸ்டாப்புக்கு முன்னாடியே நிறுத்தி விடுகிறார்கள், இல்லாவிட்டால் ஸ்டாப்பிங்கைத் தாண்டி போய் நிறுத்துகிறார்கள். பல நேரங்களில் குறித்த நேரத்தில் பஸ் வருவதில்லை. முக்கியமான நேரத்தில் கட் சர்வீஸ் போட்டு விடுகிறார்கள்.. கண்டக்டர் சரியாக சில்லறை தருவதில்லை. கேட்டால் திட்டுகிறார்கள்... இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை மக்கள் அன்றாடம் சந்திக்கிறார்கள்.




ஒவ்வொரு பஸ்ஸிலும் ஏதாவது ஒரு சண்டை இருக்கத்தான் செய்கிறது.. மக்களுக்கு பஸ் சேவைகளால் ஏற்படும் சிரமங்கள், அசவுகரியங்களைச் சரி செய்ய பல்வேறு உதவிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் குறை தீர்க்க இறங்கியுள்ளது.


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் ஏற்கனவே பஸ் ஆப் உள்ளது. இந்த நிலையில் புதிதாக சமூக வலைதள உதவிகளையும் அறிவித்துள்ளது. இனிமேல் உங்களுக்கு பஸ் பயணத்தின்போது ஏதாவது குறை ஏற்பட்டால், அதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பினால் அங்குமிங்கும் அலையத் தேவையில்லை.. இதைச் செய்தால் போதும்.


இலவச கட்டண புகார் எண் -  149


வாட்ஸ் ஆப் மூலம் புகார் கொடுக்க - 9445030516


எக்ஸ் தளத்தில் புகார் கொடுக்க - @MtcChennai


இன்ஸ்டாகிராம் மூலம் புகார் தர - @MtcChennai


பேஸ்புக் பக்கம் - @Mtcchnn