சரமாரியாக வெடித்துச் சிதறிய பேஜர்கள்.. பலர் பலி.. லெபனானை உலுக்கிய நூதன குண்டுவெடிப்பு!
டமாஸ்கஸ்: லெபனான் நாட்டில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது.
இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் காயமைடந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்திய நேரப்படி மாலை 6 மணியாகும்.
ஈரான் ஆதரவைப் பெற்ற அமைப்புதான் ஹிஸ்புல்லா. இந்த அமைப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா செயல்படுகிறது. இஸ்ரேல் - காஸா இடையிலான போரில் ஹிஸ்புல்லாவும் பல்வேறு வழிகளில் ஈடுபட்டுள்ளது.
பேஜர் சாதனங்களில் உள்ள லித்தியம் பேட்டரிகளை அதீதமாக சூடடைய வைத்து இந்த தாக்குதலை சைபர் ஹேக்கிங் முறையில் நடத்தியுள்ளனர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும் இஸ்ரேல்தான் நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்