அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி சென்ற மற்றொரு பிரபலம்.. யார் தெரியுமா..?

Manjula Devi
Mar 25, 2025,05:38 PM IST

டெல்லி:  டெல்லியில் உள்துறை அமைச்சர் அமிக்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தனது  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. ஏற்கனவே அதிமுக பாஜக மீண்டும் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.




இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 


இதனால் இதற்கு விளக்கம் அளித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், டெல்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவை தொடர்ந்து தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.