இரவு 11 மணி வரை.. இந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்க்கும்.. வானிலை மையம்!

Su.tha Arivalagan
Jun 06, 2024,09:25 PM IST

சென்னை: இரவு 11 மணிக்குள் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 37 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர்களில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


சென்னையைப் பொறுத்தவரை தென் சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது. பல இடங்களில் கன மழையாக பெய்ததால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.




வானிலை மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:


இரவு 11 மணி வரையிலான காலகட்டத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம்,  நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.