அடிக்கும் வெயிலுக்கு இதமாக.. தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் 3 நாட்கள் ஜில் ஜில் மழைக்கு வாய்ப்பு..!
Mar 06, 2025,05:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 10 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவலால் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து வெயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் மதிய வேலைகளில் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அப்போது ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
மிதமான மழை:
தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி முதல் மூன்று நாட்கள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.