ஆப்கானிஸ்தானில் அதிகாலையில், மிதமான நிலநடுக்கம்.. பெரிய பாதிப்பு ஏதுமில்லை..!

Manjula Devi
Feb 09, 2024,12:02 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் நிகழவில்லை  என தகவல் வெளிவந்துள்ளது.


இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.


அடிக்கடி நிலநடுக்கத்தை சந்திக்கும் ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் இரண்டு முறை தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், இன்று அதிகாலை  4.56 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 




இது பூமிக்கு அடியில் 115 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த மிதமான நிலநடுக்கத்தால் லேசாக  வீடுகள் அதிர்ந்தன.


இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.