முதல்வர் மு க ஸ்டாலினை.. சந்தித்து பேசிய.. மநீம தலைவர் கமல்ஹாசன்.. என்ன பேசுனாங்க?

Manjula Devi
Mar 30, 2024,04:08 PM IST

சென்னை: திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.


லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாநில முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து இன்று சேலத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் சேலத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.




திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு, அக்கட்சி லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை.

ஆனால் கமலஹாசன் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை. திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் எனக் கூறி வந்தார். அதன்படி நேற்று திமுக கூட்டணியை ஆதரித்து  முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார் மநீம  தலைவர் கமல்ஹாசன். அப்போது  ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வந்தார்.


இந்த நிலையில் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு க ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசி உள்ளார். இவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது.. என்ன பேசினார்கள்.. என்னவாயிருக்கும்.. என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இருப்பினும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முதல்வருடன் கமல்ஹாசன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.