காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வழியில்லை : அமைச்சர் துரைமுருகன்

Aadmika
Aug 12, 2023,11:06 AM IST
சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்டிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆகஸ்ட் 10 ம் தேதி நடைபெற காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியின் ஆலோசனை கூட்டத்திலும் தமிழகத்திற்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 22 முதல் 8000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.



இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்தால் தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் செல்வதை தவிர வேறு வழியில்லை. தங்களிடம் தண்ணீர் இல்லை என்னும் சூழ்நிலை கர்நாடகாவில் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என சொல்லும் அதிகாரம் கர்நாடகாவிற்கு கிடையாது. 

காவிரியில் வரலாறு பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் இது இன்று நேற்று நடப்பதல்ல. ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா தங்களின் நிலையில் பிடிவாதமாக இருப்பது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.