புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், பாஜக ஆளாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளதால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் என கடிதம் மூலம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதே சமயத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் பள்ளிக்கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் கூறினார். மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மறுபக்கம் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் பின்பற்றப்படும் எனவும் கூறியிருந்தனர்.
இதனிடையே தமிழக முதல்வர் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி சமக்ரக்ஷா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது.இரு மொழிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்காது எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் முதல்வரின் கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில், கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானம் கடிதம் எழுதி தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானம் எழுதிய கடிதத்தில், 1968 ல் தொடங்கி இந்திய கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிஷ்டமானது. காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம். பாஜக ஆளாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளதால் தமிழ்நாடு அமல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.